Saturday, May 29, 2010

கூடி வாழ்ந்தால்.

விடிய விடிய கத கேட்டு..

அண்ணே, அக்கா எல்லாரும் நல்லாருக்கியளா?

நல்லா இருப்பியன்னு தெரியும். இருந்தாலும் பண்பாடு, பாரம்பரியமுன்னு ஒன்னு இருக்குல்ல. கேட்டுத்தான ஆகணும்.

அப்புறம், ஒரு கத சொல்லலாமுன்னுதான் இங்க வந்தேன்.

கதய பாப்போமா?

----------------------------

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்.

அவருக்கு ஒரு நாளு ஒரு சந்தேகம் வந்துச்சாம். நம்ப நாட்ல நம்பள விட அழகா யாராவது இருக்காங்களா, அப்படிங்குறதுதான் அவரோட டவுட்.

ராசா புகழுறதுன்னா அல்லக்கைகளுக்கு சொல்லவா வேணும். ராசாவ ஆகா, ஓகோன்னு புகழுதுங்க. ஆனா உண்மையிலயே ராசா சுமாருக்கும் ரொம்ப கீழதான் இருப்பாரு.

எவ்வளவுதான் புகழ்ந்தாலும் திருப்தி அடையிற ராசாவ எங்கையாவது பாத்துருக்கீங்களா?. அத மாதிரிதான் நம்ப ராசாவுக்கும் திருப்தியே இல்ல.

உடனே அல்லக்கைகளெல்லாம் ஒரு மீட்டிங் போட்டுதுங்க.

அதுகளுக்கு ரொம்ப நாளா ஒரு மந்திரி மேல கண்ணு. அதாவது அந்தாளு அடிக்கடி ராசாக்கிட்ட பேரும் பரிசும் வாங்கியர்றாரு. அவர எப்படியாவது கவுக்கணும். என்ன பண்ணலாங்கிறத்துக்குதான் மீட்டிங்.

அதுங்களுக்கு ஒரு வழி கெடச்சது. ஏன்னா அந்த மந்திரி பொய் சொல்லமாட்டாரு. ராசா அவர்கிட்ட கேட்டா மந்திரி மாட்டிக்குவாருங்குறதுதான் பிளான்.

அல்லக்கைகளெல்லாம் ராசாகிட்ட போயி 'நாங்க சொன்னதுலெல்லாம் உங்களுக்கு திருப்தியே இல்ல. அதுனால நீங்க அந்த மந்திரிக்கிட்ட கேளுங்க'ன்னு சொன்னுச்சுங்க.

ராசாவும் அந்த மந்திரி கூப்பிட்டு ஆளு அனுப்பினாரு.

மந்திரி வந்தவுடனே ராசா அந்த கேள்விய கேட்டாரு. மந்திரியும் ரொம்ப பொருமையா வெளக்கம் சொன்னாரு. அதாவது அழகுங்கிறது உருவத்துல இல்ல. உள்ளத்துலதான் இருக்குன்னு. உங்களுக்கு நீங்க அழகா இருந்தா போதும். எனக்கு நான் அழகா இருந்தா போதும்ன்னு, நெறைய மேற்க்கோளெல்லாம் காட்டி சொன்னாரு.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ராசா அமைதியா மந்திரிக்கிட்ட கேட்டாரு 'நான் அழகா இருக்கேனா இல்லயான்னு?'.

-------------------------------

இதைத்தான் எங்க ஊருல ஒரு பழமொழியா சொல்லுவாங்க. 'விடிய விடிய கத கேட்டு நயன்தாராவுக்கு பிரபுதேவா தம்பியா'ன்னு கேட்டாங்களாம்.

Wednesday, May 26, 2010

வணக்கம்.

எல்லாருக்கும் வணக்கம்.

நானும் உங்களோட சேர்ந்து எதையாவது உளறலாமுன்னு வந்திருக்கேன்.

எல்லாரும் வந்து வாழ்த்தணும்னு கேட்டுக்கொள்(ல்)கிறேன்.

நன்றிங்கோ.