Tuesday, July 27, 2010

ஏன்டா நீங்க திருந்தவே மாட்டீங்களா?

என்னய்யா சொல்றது?

இப்ப இவனுங்க வரலன்னு யாரு அழுதாங்க?

எப்ப எங்க வந்தாலும் ஏழரைய கூட்டாம போக மாட்டேங்குறாய்ங்க.

எனக்கு ஒரு டவுட்டுங்க.

ஒழு மாநிலத்தோட முதலமைச்சர் அதில இருக்குற ஒரு மாவட்டத்துக்கு போனா பள்ளி, கல்லூரிக்கெல்லாம் லீவ் விடணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?

அப்படியே விட்டாலும் காலையிலேயே விட்டுத்தொலைய வேண்டியதுதான.

புள்ளங்கள பாத்தா பாவமா இல்லையா?

பஸ், ஆட்டோ எல்லாத்தையும் நிறுத்திட்டு திடீர்னு மதியத்தோட குழந்தைகளை வீட்டுக்கு போக சொன்னா எப்படி போக முடியும்?

ஏன்டா பெத்தவங்களோட பாவத்த கொட்டிக்கிறீங்க?

திருந்துங்கடா..

Thursday, July 8, 2010

பதிவுலக FM நைன்ட்டி ஏழரை(97.5)

----------------------------
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
----------------------------

1. நம்ப ஆளு A அவங்க ஆளு N ஐ தாக்கி ஒரு பதிவு போடுவாரு.

2. உடனேயே நம்ப ஆளு B நம்ப ஆளு A க்கு ஆதரவா எழுதுவாரு.

3. அவங்க ஆளு N, நம்ப ஆளு Aக்கும் Bக்கும் சேர்த்து விளக்க பதிவு போடுவாரு. அது விளக்கமா இல்லாம கொஞ்சம் வி(வ)காரமா இருக்கும்.

4. பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சுன்னு தெரிஞ்ச உடனேயே எங்கிருந்தாலும் ஆஜர் ஆகும் அவங்களோட நாட்டாமை மிஸ்டர் X, சண்டை போடாம சமாதானமா போங்கன்னு பதிவாரு.

5. அவங்க ஆளு N எழுதிட்டாருன்னா நம்ப ஆளுங்க பாத்துக்கிட்டா இருப்பாங்க? இப்ப நம்ப ஆளு C களமிறங்குவாரு.

6. நம்ப ஒரு குரூப்புன்னா அவங்களும் ஒரு குரூப்புதான். இப்ப மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O, N க்கு ஆதரவா எழுதுவாங்க. அது நம்ப ஆளுங்க, ஆனா இப்ப நடந்துக்கிட்டு இருக்குற பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத D, E மற்றும் F க்கு எதிரா இருக்கும்.

7. பொறுமையா இருந்தா நம்பள பொங்கல் வெச்சுருவாங்கன்னு கன்ஃபார்ம் ஆன உடனே D எழுத ஆரம்பிப்பாரு.

8. D எழுதி ரிலீஸ் ஆகுறத்துக்குள்ள மற்றும் ஒரு நாட்டாமை K (இவரு நம்ப ஆளு) சமாதான உடன்படிக்கை ஏற்பட பாடுபடுற மாதிரி எழுதுவாரு.

9. இப்ப D எழுதின பதிவு வெளிவரும். மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O க்கிட்ட நம்ப ஆளு அவரோட பேர இழுத்ததுக்கு ஆதாரமும் விளக்கமும் கேட்பாரு. போகிற போக்கில் அவங்க ஆளுங்க P, Q மற்றும் R ஐ இழுத்து உள்ளே விடுவாரு.

10. இந்த P, Q, R, E, F இருக்காங்களே, இவங்க யாரு தெரியுமா? நம்ப குரூப்புலயும் அவங்க குரூப்புலயும் இருந்த முன்னாள் உறுப்பினர்கள். அவங்க எல்லாம் இப்போ எழுதுறதும் இல்ல. படிக்கிறதும் இல்ல. சோ அவங்க திரும்ப பதில் எழுத வாய்ப்பு இல்லை.

11. நம்ப D க்கு விளக்கம் கொடுக்க யாரும் இல்லாததால D மறுபடியும் எழுதி வெளக்கம் கேட்பாரு.

12. நம்ப ஆளு D யை அமைதியாக இருக்கும்படி அவங்களோட நாட்டாமை Y சொல்லுவாரு.

13. நம்பக்கிட்டா நாட்டாமைக்கு பஞ்சமா, என்ன?. நம்ப நாட்டாமை L, அவங்க நாட்டாமை Yக்கு பதில் சொல்லுவாரு.

14. மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O, Dக்கு வெளக்கம் கொடுத்து A வை மீண்டும் உள்ளே இழுப்பாங்க.

15. நம்ப ஆளு Aயை வம்பிழுத்தா பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? இப்ப நம்ப ஆளு G அவங்க குரூப்புல இருக்குற எல்லாரையும் (N to W) அவங்க ஏற்கனவே இந்த பிரச்சனையின் மையக்கருத்துடன் சம்பந்தபடுத்தி எழுதிய பல பதிவுகளின் லிங்க் உடன் எழுதுவாரு.

16. ஒரு ரெண்டு மணி நேரம் அமைதியா இருக்கும். எதனாலன்னு கேட்டிங்கன்னா என்ன சொல்றது?. மதிய உணவு இடைவேளைன்னு வச்சுக்குவோமே.

17. மீண்டும் நம்ப ஆளு A, O க்கு பதில் எழுதுவாரு.

18. அவங்க நாட்டாமைகளாக இதுவரை நாம் பார்த்த X, Y நம்ப ஆளு H னால் கிழிக்கப்படுவார்கள்.

19. நம்ப நாட்டாமை L அமைதி விரும்பியாக எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து நம்ப ஆளுங்க I யையும் J யையும் தாக்கி சேம் சைடு கோல் போடுவாரு.

20. எப்படியும் நம்ப நாட்டாமை L எல்லாத்தையும் கவர் பண்ணி இருப்பாரு.

21. நம்ப நாட்டாமைகள் K மற்றும் L, Wவினால் துவைத்து தொங்கவிடப்படுவார்கள்.

22. கடைசியா உங்களுக்கு ஒரே ஒரு வேலைதான். எல்லாத்தையும் படிச்சி பாத்துட்டு தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான்.

23. நீங்க சட்டு புட்டுன்னு தீர்ப்பை சொன்னாத்தான் நீங்க அவங்க ஆளு Zஆ, இல்லை எங்க ஆளு Mஆன்னு நாங்க முடிவு எடுத்து உங்களை அரவணைக்குறதா இல்லை தாக்குறதான்னு முடிவு பண்ண முடியும்.

24. ப்ளீஸ் டைம் முடிய போகுது. சீக்கிரமா சொல்லுங்க.

25. என்ன சொல்லீட்டீங்களா? இருங்க படிச்சிட்டு வர்றேன்.

Tuesday, June 8, 2010

தினமலரின் தலைப்புச் செய்திகளும், அட்டகாசமான மொழிப்பெயர்ப்பும்

--------
========
--------
யாரு சார் அங்கே அழகான ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது?

திருஷ்டி சுத்திப் போடுங்க. கூட வேலை பாக்குற பக்கத்து ஸ்டேட் பையன் கண்ணு வெச்சுட்டான்.

1. செய்தி: ஸ்டாலின் வழங்கிய காசோலை: மாற்ற முடியாமல் மகளிர் சுய உதவி குழுவினர் தவிப்பு.

In English: Stailin to selp help group, they have struggled (என்னா குடுத்தாருன்னு தெளிவா சொல்லுங்கப்பா, அது இன்னா selp)


2. செய்தி: கருணை கொலை செய்ய வேண்டி திருச்சி கலெக்டரிடம் பெண் புகார்.

In English: Make a mildness kill, women petition to collector (மெர்சி கில்லிங் தெரியும், அது இன்னா மைல்ட்னஸ் கில்லிங்)


3. செய்தி: திருமணம் செய்து கொள்வதாக 20 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது.

In English: one man arrest for marraige ceating of 20 womens (முடியல)


4. செய்தி்: மாட்டு வண்டியில் சிக்கி பள்ளி மாணவி பலி

In English: girl student murder, caught bullouck hart (பாவம்ப்பா, பாப்பாவும், ஆங்கிலமும்)


5. செய்தி: ராஜா நிபந்தனையுடன் தி.மு.கவில் சேர்ப்பு

In English: Raja joins DMK in condition (யாராவது வெளக்கம் தர முடியுமா?).


6. செய்தி: திருச்சி சிறையில் சோதனை: மொபைல் போன் சிக்கியது.

In English: check point in tiruchi jail, mobile receovered.
இன்னும் நிறைய இடத்தில் இப்படித்தான் இருக்கிறது. ஏன்னு தெரியலை. சில செய்திகளை திறக்க முடியவில்லை. தினமலர் வெப்சைட் புட்டுக்கிச்சா? இது வரைக்கும் ஒரு ஸ்டேட் காரன்தான் மானத்தை வாங்கினான். விடியிறதுக்குள்ள ஊரெல்லாம் பரப்பி விட்டுவிடுவான். என்னமோ நான்தான் மொழிப்பெயர்த்த மாதிரி.

உங்களிடம் இப்ப யாரு கேட்டாங்க ஆங்கிலத்தில் வேண்டும் என்று.


-----------------------------------
செய்வன திருந்த செய்.
-----------------------------------

Tuesday, June 1, 2010

போங்கய்யா. நீங்களும் உங்க பதிவுலகமும்...என்னய்யா தெரியும் உங்களுக்கு?

இந்த அய்யாவுக்கு என்ன தெரியும்?

இந்த பாப்பாவுக்கு என்ன தெரியும்?

அட யாருக்குதான்டா தெரியும்?

உங்க ஊருக்குல்ல என்ன நடக்குதுன்னு?

இங்க தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆயிடுறான்.

இரத்த கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா சொல்லுவாரு.

ஆளாளுக்கு தலைவன். ஆளுக்கொரு கட்சி. அவனவனுக்கொரு கொள்கை. கூட அரை டஜன் பட்டினி பட்டாளங்கள்ன்னு.

போய் புள்ளகுட்டிங்கள படிக்கவெய்யுங்கய்யா? டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.

Saturday, May 29, 2010

கூடி வாழ்ந்தால்.

விடிய விடிய கத கேட்டு..

அண்ணே, அக்கா எல்லாரும் நல்லாருக்கியளா?

நல்லா இருப்பியன்னு தெரியும். இருந்தாலும் பண்பாடு, பாரம்பரியமுன்னு ஒன்னு இருக்குல்ல. கேட்டுத்தான ஆகணும்.

அப்புறம், ஒரு கத சொல்லலாமுன்னுதான் இங்க வந்தேன்.

கதய பாப்போமா?

----------------------------

ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்.

அவருக்கு ஒரு நாளு ஒரு சந்தேகம் வந்துச்சாம். நம்ப நாட்ல நம்பள விட அழகா யாராவது இருக்காங்களா, அப்படிங்குறதுதான் அவரோட டவுட்.

ராசா புகழுறதுன்னா அல்லக்கைகளுக்கு சொல்லவா வேணும். ராசாவ ஆகா, ஓகோன்னு புகழுதுங்க. ஆனா உண்மையிலயே ராசா சுமாருக்கும் ரொம்ப கீழதான் இருப்பாரு.

எவ்வளவுதான் புகழ்ந்தாலும் திருப்தி அடையிற ராசாவ எங்கையாவது பாத்துருக்கீங்களா?. அத மாதிரிதான் நம்ப ராசாவுக்கும் திருப்தியே இல்ல.

உடனே அல்லக்கைகளெல்லாம் ஒரு மீட்டிங் போட்டுதுங்க.

அதுகளுக்கு ரொம்ப நாளா ஒரு மந்திரி மேல கண்ணு. அதாவது அந்தாளு அடிக்கடி ராசாக்கிட்ட பேரும் பரிசும் வாங்கியர்றாரு. அவர எப்படியாவது கவுக்கணும். என்ன பண்ணலாங்கிறத்துக்குதான் மீட்டிங்.

அதுங்களுக்கு ஒரு வழி கெடச்சது. ஏன்னா அந்த மந்திரி பொய் சொல்லமாட்டாரு. ராசா அவர்கிட்ட கேட்டா மந்திரி மாட்டிக்குவாருங்குறதுதான் பிளான்.

அல்லக்கைகளெல்லாம் ராசாகிட்ட போயி 'நாங்க சொன்னதுலெல்லாம் உங்களுக்கு திருப்தியே இல்ல. அதுனால நீங்க அந்த மந்திரிக்கிட்ட கேளுங்க'ன்னு சொன்னுச்சுங்க.

ராசாவும் அந்த மந்திரி கூப்பிட்டு ஆளு அனுப்பினாரு.

மந்திரி வந்தவுடனே ராசா அந்த கேள்விய கேட்டாரு. மந்திரியும் ரொம்ப பொருமையா வெளக்கம் சொன்னாரு. அதாவது அழகுங்கிறது உருவத்துல இல்ல. உள்ளத்துலதான் இருக்குன்னு. உங்களுக்கு நீங்க அழகா இருந்தா போதும். எனக்கு நான் அழகா இருந்தா போதும்ன்னு, நெறைய மேற்க்கோளெல்லாம் காட்டி சொன்னாரு.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ராசா அமைதியா மந்திரிக்கிட்ட கேட்டாரு 'நான் அழகா இருக்கேனா இல்லயான்னு?'.

-------------------------------

இதைத்தான் எங்க ஊருல ஒரு பழமொழியா சொல்லுவாங்க. 'விடிய விடிய கத கேட்டு நயன்தாராவுக்கு பிரபுதேவா தம்பியா'ன்னு கேட்டாங்களாம்.

Wednesday, May 26, 2010

வணக்கம்.

எல்லாருக்கும் வணக்கம்.

நானும் உங்களோட சேர்ந்து எதையாவது உளறலாமுன்னு வந்திருக்கேன்.

எல்லாரும் வந்து வாழ்த்தணும்னு கேட்டுக்கொள்(ல்)கிறேன்.

நன்றிங்கோ.