----------------------------
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
----------------------------
1. நம்ப ஆளு A அவங்க ஆளு N ஐ தாக்கி ஒரு பதிவு போடுவாரு.
2. உடனேயே நம்ப ஆளு B நம்ப ஆளு A க்கு ஆதரவா எழுதுவாரு.
3. அவங்க ஆளு N, நம்ப ஆளு Aக்கும் Bக்கும் சேர்த்து விளக்க பதிவு போடுவாரு. அது விளக்கமா இல்லாம கொஞ்சம் வி(வ)காரமா இருக்கும்.
4. பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சுன்னு தெரிஞ்ச உடனேயே எங்கிருந்தாலும் ஆஜர் ஆகும் அவங்களோட நாட்டாமை மிஸ்டர் X, சண்டை போடாம சமாதானமா போங்கன்னு பதிவாரு.
5. அவங்க ஆளு N எழுதிட்டாருன்னா நம்ப ஆளுங்க பாத்துக்கிட்டா இருப்பாங்க? இப்ப நம்ப ஆளு C களமிறங்குவாரு.
6. நம்ப ஒரு குரூப்புன்னா அவங்களும் ஒரு குரூப்புதான். இப்ப மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O, N க்கு ஆதரவா எழுதுவாங்க. அது நம்ப ஆளுங்க, ஆனா இப்ப நடந்துக்கிட்டு இருக்குற பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத D, E மற்றும் F க்கு எதிரா இருக்கும்.
7. பொறுமையா இருந்தா நம்பள பொங்கல் வெச்சுருவாங்கன்னு கன்ஃபார்ம் ஆன உடனே D எழுத ஆரம்பிப்பாரு.
8. D எழுதி ரிலீஸ் ஆகுறத்துக்குள்ள மற்றும் ஒரு நாட்டாமை K (இவரு நம்ப ஆளு) சமாதான உடன்படிக்கை ஏற்பட பாடுபடுற மாதிரி எழுதுவாரு.
9. இப்ப D எழுதின பதிவு வெளிவரும். மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O க்கிட்ட நம்ப ஆளு அவரோட பேர இழுத்ததுக்கு ஆதாரமும் விளக்கமும் கேட்பாரு. போகிற போக்கில் அவங்க ஆளுங்க P, Q மற்றும் R ஐ இழுத்து உள்ளே விடுவாரு.
10. இந்த P, Q, R, E, F இருக்காங்களே, இவங்க யாரு தெரியுமா? நம்ப குரூப்புலயும் அவங்க குரூப்புலயும் இருந்த முன்னாள் உறுப்பினர்கள். அவங்க எல்லாம் இப்போ எழுதுறதும் இல்ல. படிக்கிறதும் இல்ல. சோ அவங்க திரும்ப பதில் எழுத வாய்ப்பு இல்லை.
11. நம்ப D க்கு விளக்கம் கொடுக்க யாரும் இல்லாததால D மறுபடியும் எழுதி வெளக்கம் கேட்பாரு.
12. நம்ப ஆளு D யை அமைதியாக இருக்கும்படி அவங்களோட நாட்டாமை Y சொல்லுவாரு.
13. நம்பக்கிட்டா நாட்டாமைக்கு பஞ்சமா, என்ன?. நம்ப நாட்டாமை L, அவங்க நாட்டாமை Yக்கு பதில் சொல்லுவாரு.
14. மிஸ்டர் / மிஸஸ் / மிஸ் O, Dக்கு வெளக்கம் கொடுத்து A வை மீண்டும் உள்ளே இழுப்பாங்க.
15. நம்ப ஆளு Aயை வம்பிழுத்தா பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? இப்ப நம்ப ஆளு G அவங்க குரூப்புல இருக்குற எல்லாரையும் (N to W) அவங்க ஏற்கனவே இந்த பிரச்சனையின் மையக்கருத்துடன் சம்பந்தபடுத்தி எழுதிய பல பதிவுகளின் லிங்க் உடன் எழுதுவாரு.
16. ஒரு ரெண்டு மணி நேரம் அமைதியா இருக்கும். எதனாலன்னு கேட்டிங்கன்னா என்ன சொல்றது?. மதிய உணவு இடைவேளைன்னு வச்சுக்குவோமே.
17. மீண்டும் நம்ப ஆளு A, O க்கு பதில் எழுதுவாரு.
18. அவங்க நாட்டாமைகளாக இதுவரை நாம் பார்த்த X, Y நம்ப ஆளு H னால் கிழிக்கப்படுவார்கள்.
19. நம்ப நாட்டாமை L அமைதி விரும்பியாக எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து நம்ப ஆளுங்க I யையும் J யையும் தாக்கி சேம் சைடு கோல் போடுவாரு.
20. எப்படியும் நம்ப நாட்டாமை L எல்லாத்தையும் கவர் பண்ணி இருப்பாரு.
21. நம்ப நாட்டாமைகள் K மற்றும் L, Wவினால் துவைத்து தொங்கவிடப்படுவார்கள்.
22. கடைசியா உங்களுக்கு ஒரே ஒரு வேலைதான். எல்லாத்தையும் படிச்சி பாத்துட்டு தீர்ப்பு சொல்ல வேண்டியதுதான்.
23. நீங்க சட்டு புட்டுன்னு தீர்ப்பை சொன்னாத்தான் நீங்க அவங்க ஆளு Zஆ, இல்லை எங்க ஆளு Mஆன்னு நாங்க முடிவு எடுத்து உங்களை அரவணைக்குறதா இல்லை தாக்குறதான்னு முடிவு பண்ண முடியும்.
24. ப்ளீஸ் டைம் முடிய போகுது. சீக்கிரமா சொல்லுங்க.
25. என்ன சொல்லீட்டீங்களா? இருங்க படிச்சிட்டு வர்றேன்.
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
ஆமாங்க.. எனக்கும் மகா போரடிக்குது.. சீக்கிரமா பஞ்சாயத்தை முடிச்சிட்டு தீர்ப்பைச் சொல்லிருங்க..!
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆமாங்க.. எனக்கும் மகா போரடிக்குது.. சீக்கிரமா பஞ்சாயத்தை முடிச்சிட்டு தீர்ப்பைச் சொல்லிருங்க..! //
யாருமே வரமாட்டேங்குறாங்கல்ல. நான் என்ன பண்றது.
நன்றி அண்ணன். நீங்களாவது வந்தீங்களே!
இதுல நீங்க எந்த லெட்டர்.
//வழிப்போக்கன் said...
இதுல நீங்க எந்த லெட்டர். //
நீங்க எதுன்னு முடிவு பண்ணினாத்தானே என்னோடத முடிவு பண்ண முடியும்.
வருகைக்கு நன்றி
தும்ததா!
//ராஜன் said...
தும்ததா! //
எல்லா இடத்துலேயும் இதுதானா?
இது என்ன புது டெம்ப்ளேட்டா?
நன்றி ராஜன்.
//16. ஒரு ரெண்டு மணி நேரம் அமைதியா இருக்கும். எதனாலன்னு கேட்டிங்கன்னா என்ன சொல்றது?. மதிய உணவு இடைவேளைன்னு வச்சுக்குவோமே.
//
:)))
நல்லா அலசி காயவைச்சுட்டீங்க. சூப்பர்
//சென்ஷி said...
//16. ஒரு ரெண்டு மணி நேரம் அமைதியா இருக்கும். எதனாலன்னு கேட்டிங்கன்னா என்ன சொல்றது?. மதிய உணவு இடைவேளைன்னு வச்சுக்குவோமே.
//
:)))
நல்லா அலசி காயவைச்சுட்டீங்க. சூப்பர்//
நன்றி சென்ஷி அண்ணே.
,,..)))) இந்த மாதிரி எழுதறவங்க எந்த லெட்டர்
//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
,,..)))) இந்த மாதிரி எழுதறவங்க எந்த லெட்டர்//
நீங்க செலக்ட் பண்றத்துக்கு ஆப்போசிட் லெட்டர்
நன்றி மணி அண்ணன்
Post a Comment
எதாவது சொல்லீட்டு போங்க...